பூமிக்கு ஏலியன்கள் வந்தாலும் அது ஆச்சரியம் இல்லை – ஸ்டீபன் ஹாகிங்

1481

நகரும் நாற்காலியில் இருந்து அண்டத்தை நகர்த்தி, ஆதி முதல் அந்தம் வரை பார்த்து இன்னும் இடம் இருக்கிறது என தன் ஆராய்ச்சியை தனது இறப்பு வரை அறிவியலோடு பிண்ணி பிணைந்தவர் தான் ஸ்டீபன் ஹாகிங்.

 

11 ம் வகுப்பு ஆங்கில புத்தக அட்டையில் வீல் சேரில் தலை விழுந்து ஒருவர் இருப்பார் அவர் தான் ஸ்டீபன் ஹாகிங்.  புத்தக அட்டையோடு மறந்து போனவரை நினைவிற்கு கொண்டு வருவது தான் இந்த கட்டுரை.

ஸ்டீபன் ஹாகிங் 1942 ஜனவரி 8 ல் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு நகரில் பிரான்க், இசபெல் க்கு மகனாக பிறந்தவர் தான் ஸ்டீபன் ஹாகிங். அதாவது இன்று தான் அவர் பிறந்த நாள். இவரை தவிர இவர் வீட்டில் இரண்டு தங்கைகள். மற்றும் ஒரு வளர்ப்பு தம்பியும் இருந்து வந்தனர்.

இயல்பான வாழ்க்கையை இவரும் வாழ்ந்து வந்தார்.  கணிதம் பாடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர் இவர். அதனாலே கணிதம் பாடம் படிக்க விரும்பினார். வாய்ப்பு கிடைக்காததால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்துக்கொண்டிருந்தார்.

நாற்காலியில் அமர்ந்தே நாம் ஸ்டீபன் ஹாகிங். அவரும் எல்லோரை போலவும் ஆடி, ஓடு விளையாடிவர் தான்.  ஒருநாள், நடக்கும்போது திடீரெனப் பாதம் தடுமாறி விழுந்தார். அதனை பெரிதாக எண்ணவில்லை. பின்பு தான் தெரிந்தது அது ‘தசைகளை இயக்கும் நரம்புகளின் செயல்குறைவு’ என்பது.

21-ம் வயதில் Motor Neurone Disease என்ற நரம்பு சார்ந்த நோயில் அகப்பட்டார். பின் தன் இயல்பு வாழ்க்கையிலிருந்து தன்னை ஒதுக்கி கொண்டு நண்பர்கள், காதலி ஜேன் என்று யாரையும் சந்திக்காமல் இருந்து வந்தார்.

இது தான் நம் வாழ்க்கை எல்லாம் முடிந்தது என எண்ணும் போது தான், தன் மன உறுதியடைந்த நிகழ்வு நடந்தது. அவர் மருத்துவமணையில் இருந்த போது லுக்குமியா நோயினால் அவதிப்படும் ஒருவரின் வேதனைகளைப் பார்த்த ஹாக்கிங், தனக்கு நேர்ந்தவை ஒன்றுமேயில்லை என்ற முடிவுக்கு வந்தார்.பின் ஒரு நாள் தனக்கான காலம் மிகக்குறைவு என்பதை புரிந்துகொண்டார்.நாம் இறந்தாலும் நம் எண்ணங்கள் இந்த உலகில் உயிருடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை மாற்றிக் கொண்டார்.

பிரபஞ்சத்தில் கருத்துளைகள் இல்லை என்ற எண்ணம் கொண்டவர். ஆராய்ச்சியில் தன் கருத்தை மாற்றிக் கொண்டார். தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம், பிரபஞ்சத்தில் கருந்துளைகள் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தவர்,அறிவியியலோடு தன் வாழ்வை இணைத்து கொண்டார்.  காலம் கடந்து தன் உடல் அந்த நகரும் நாற்காலிக்கே சென்றது. தன் குரலையும் இழந்து கருவி மூலம் வாய் தசை அதிர்வு கொண்டு பல வருடம் பேசியும் வந்தார்.

அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகிய ஆய்வுத்துறையில் தலைசிறந்த விஞ்ஞானியாக தன்னை மாற்றினார். அன்று மருத்துவமனையில் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால், இன்று நம் பிரபஞ்சம் பற்றியான தகவல் பல தெரியாமலே போயிருக்கும். பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்டீவ் ஸ்மித் ன் கருத்தியல் படங்களில் வரும்  மிகவும் மர்மமான பிளாக் ஹோல், ஏலியன் போன்றவை இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

அதற்கான ஆராய்ச்சியையும் தொடர்ந்து செய்து வந்தவர். ‘’ஏலியனை யாரும் தேடவேண்டம், ஏலியன் குணாதிசியம் கெட்டவையாக கூட இருக்கலாம்’’ என பல முறை பல ஆய்வுக்கு எச்சரிக்கை மணி அடித்தவர். செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) என்பது மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் முதல் வைத்த கருத்தியல்.

இயந்திரங்கள் அல்லது மென்பொருள்களுக்கு புலனாய்வு அறிவை செலுத்துவதே செயற்கை நுண்ணறிவு எனப்படும்.இந்த கருத்தியலில் உருவானது தான் சங்கரின் எந்திரன் திரைப்படம். ஹாலிவுட்டில் ஐ ரோபோ லாம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு சமமான முறையில் செயல்படுகிறது. மேலும் சில நேரத்தில் மனிதர்களை மிஞ்சி விடுகிறது என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஸ்டீபன் ஹோக்கிங் அதிகம் நம்பும் ஒரு கருத்து ஏலியன்கள் 2010-ஆம் ஆண்டில் தனது ஆய்வில் ஏலியன்கள் இருப்பது உறுதி,

அவைகள் என்றும் பூமிக்கு நட்பு பாராட்டாது  என்று உலக ஆய்வாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.  சில ரக ஏலியகளின் குணாதிசியம் என்பது கண்ணில் தென்பட்ட கிரகங்களை கைப்பற்றுவது, சொந்தம் கொண்டாடுவது போன்றதாய் கூட இருக்கலாம் என்று ஸ்டீபன் ஹாக்கிங் நம்புகிறார். பூமிக்கு ஏலியன்கள் வந்தாலும் அது ஆச்சரியம் இல்லை என்றார்.ஏலியன்களை அடிப்படையாக கொண்டு இதுவரை உலக சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் வந்திருக்கும்.

இப்படி தன் வாழ்வையும் தன் உலகத்தையும் அறிவியல் ஆய்விற்காக நாற்காலியை நகர்த்தியே சாதித்து வந்தவர்.கடந்தாண்டு மார்ச் மாதம் 14 ல் காலமானார்.  பல கருத்தியல்கள் பல மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அழியாத கருத்தியலை உருவாக்குகிறார். அந்த வகையில் ஸ்டீபன் ஹாகிங் அழியாத சரித்திரமாவார்.