உடற்பயிற்சியை மிஞ்சிய படி ஏறுதல்! இதய நோய்க்கு பெஸ்ட் சாய்ஸ்!

1262

நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயநோயாளிகளின் அளவு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோய் அளவு அதிகரிப்பதற்கு ஆக்டிவ்வான வாழ்க்கை முறை இல்லாததே முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

நீரழிவு மற்றும் இதய நோயாளிகள் நோயை கட்டுப்படுத்துவற்காக, நீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்த பயிற்சிகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால், அணைவராலும் இந்த பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி அதன் ஆய்விதழில் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில், நீரழிவு மற்றும் இதய நோயாளிகள் உடற்பயிற்சிகள் செய்வதற்கு பதில் படி ஏறினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படி ஏறுவதன் மூலம், ரத்த அழுத்தம் குறைவதோடு கால்களுக்கும் வலுகிடைக்கிறது என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மெனோபாஸ் பருவத்தை அடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இதயத்தின் ரத்தநாளங்கள் இறுக்கமடைவது, மூட்டு இணைப்புகளில் நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அவர்களுக்கு இந்த படி ஏறுதல் உடற்பயிற்சி குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்படுத்தி தரும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of