குடிநீர் விநியோகம் விரைவில் தொடங்க நடவடிக்கை – கே.பி.அன்பழகன்

125

தருமபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பும் திட்டத்திற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமயில் நடைபெற்றது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கலங்கலாக வருவதால் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், குடிநீர் விநியோகம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of