100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

212

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், பல திட்டங்களக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாயை எடப்பாடி அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

கதிர் ஆனந்த் வெற்றி பெற்றால் மலைவாழ் மக்களின் வசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், சாலை வசதி போன்ற அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை போன்ற திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், அந்த திட்டங்களை முறைப்படுத்த தி.மு.க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of