ஸ்டெர்லைட் விவகாரம் – 2 மனுக்கள் ஒன்றாக சேர்த்து நாளை மறுநாள் விசாரணை

473

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற100-வது நாள் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் ஆலைய மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதனிடையே ஜனவரி 21ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் ஒன்றாக சேர்த்து வரும் 8 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சென்னையில் சந்தித்து பேசியுள்ளனர்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of