பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

641

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் கேப்டவுனில்
நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் மற்றும் இளம் பந்துவீச்சாளர் கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினர். இந்த மூவர் மீதும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை விதித்தது. அதே போல்,
இளம் பந்துவீச்சாளர் கேமரூன் பான்கிராப்ட்க்கு 9 மாதங்கள் விளையாட தடை விதித்திருந்தது. இதனால் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஸ்டீவ் ஸ்மித் விளையாடி கொண்டிருந்தார்.

இந்நிலையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாடவிருக்கும் வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

மேலும், ஏபிடி வில்லியர்ஸ், ரஷித் கான், பிரண்டன் மெக்கல்லம், கெவின் பொல்லார்டு, பிராவோ உள்பட 14 வீரர்கள் பி.எஸ்.எல் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement