பிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழையுங்கள் – முதல்வர்

383

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் சீனிவாசன் செங்கோட்டையன் தங்கமணி வேலுமணி ஜெயகுமார் அன்பழகன் கருப்பணன் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்த பின் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்வது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் அரசின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை மீட்டெடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of