மதுரவாயலில் பங்குச்சந்தை ஆலோசகர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

555

சென்னை மதுரவாயலில் பங்குச்சந்தை ஆலோசகர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அருகே உள்ள பூந்தமல்லியைச் சேர்ந்தவர் கணேஷ். பங்குச்சந்தை ஆலோசகரான இவர் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லியில் உள்ள வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். மதுரவாயல் ஏரிக்கரையில் அவரது கார் சென்றபோது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்றுள்ளனர்.

இதுபற்றி அவரது மனைவி நித்யப்பிரியா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பங்குச்சந்தை மோசடி வழக்கு தொடர்பாக பெங்களூரில் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு ஊர் திரும்பியபோது கணேஷ் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of