மலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….

1426

வேர்க்கடலை கஞ்சி

வேர்க்கடலைக் கஞ்சி செய்ய ஐந்து பொருட்கள் மட்டும் இருந்தாலே போதும்.

வேர்க் கடலை ( பொடி செய்தது )   ¼ கிலோ
முருங்கை இலை ( பொடி செய்தது)  20 கிராம்
பால்  ¼ லிட்டர்
தண்ணீர்  ½  லிட்டர்
நாட்டுச் சர்க்கரை  தேவையான அளவிற்கு

 செய்யும் முறை :

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் வேர்க் கடலை பொடி சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் வைத்து நன்கு காய்க்க வேண்டும். பழுப்பு நிறமாக மாறிய உடன் ( வெந்த பதம் தெரியும் ) முருங்கை பொடியைச் சேர்க்க வேண்டும். நன்கு கரைந்த உடன், பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை தேவையான அளவிற்குச் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு காய்த்து இறக்கவும். ஆற வைத்து பிறகு அருந்தலாம்.

வேர்க்கடலைக் கஞ்சியின் நன்மைகள் :

  • மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
  • வாயுத் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் உடலில் வாயுத் தொல்லை நீங்கும்.
  • இந்த வேர்கடலைக் கஞ்சியை அதிகப்படியான பசியுணர்வு உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பசியுணர்வை சீராக்க உதவும்.
Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of