கமல்ஹாசன் கூட்டத்தில் கல் மற்றும் முட்டை வீச்சு…

202

அரவக்குறிச்சி தொகுதியில் கமல்ஹாசன் பரப்புரை கூட்டத்தில் கல் மற்றும் முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், வேலாயுதம்பாளையம் பகுதியில் அரவக்குறிச்சி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முடித்துவிட்டு செல்லும் போது முட்டை மற்றும் கல்வீசப்பட்டது.

கல் மற்றும் முட்டை வீசிய நபர்கள் போலீசார் தப்பிக்கவிட்டதாக கவிஞர் சினேகன் குற்றம்சாட்டினார். மேலும், கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் எஸ்.பி.விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினார். கமல்ஹாசன் பிரச்சார மேடையை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று காலணி வீசப்பட்டது. இன்று அரவக்குறிச்சி தொகுதியில் கல் மற்றும் முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of