வந்தே பாரத் ரெயில் மீது கல் வீச்சு!

478
சென்னை ஐ.சி.எப். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த ரெயிலுக்கு  வந்தே பாரத் விரைவு ரெயில் என பெயர் சூட்டினர்.டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த  ரெயில் சேவையில் பாதிப்பு நேரிட்டதால் விமர்சனங்கள் எழுந்தது.
மேலும் நேற்று ரெயில் வாரணாசியிலிருந்து டெல்லி நோக்கி பயணம் செய்த போதும் ரெயில் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. இதனால் ரெயிலின் முன்பக்க கண்ணாடி, பெட்டிகளில்  உள்ள ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளது.
இதனையடுத்து அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு சென்று  ரெயிலை பரிசோதனை செய்தனர். பின்னர் ரெயில் பயணத்தை தொடங்கியது. இதனையடுத்து பயணிகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை  எடுக்கப்படுகிறது என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கல்வீச்சுக்கு காரணம் கால்நடைகள் மீது ரெயில் மோதியதால் கற்கள் வீசப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.