ஹைட்ரோ கார்பன் எடுக்காதே.! காவிரியை தடுக்காதே..! – டுவிட்டரில் டிரெண்டாடும் ஹேஷ்டாக்

1467

ஹைட்ரோ கார்பன் எடுக்காதே காவிரியை தடுக்காதே என்ற முழக்கத்தில் டுவிட்டரில்  என்ற ஹேஷ்டாக் தற்பொழுது டிரெண்டாகி வருகிறது.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் நெடுங்காலமாக காவிரி நீரை தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் காவிரி நீரை தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலம் தமிழகத்திற்கு குறிப்பிட்ட டிஎம்சி நீர் வழங்கவேண்டும் என்று கூறிய பிறகும் கர்நாடகாவில் தண்ணீர் தராமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதனால் தமிழக விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். விவசாயம் செய்வதற்கு போதுமான நீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். பருவமழையும் பொய்த்து விட்டதால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை டெல்டா மாவட்டத்திற்கு கொண்டுவரும் முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்துள்ளது.

 அதன் ஒருபகுதியாக  என்ற ஹேஷ்டாகை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .