5, 8-க்கு பொதுத்தேர்வா? ஸ்டாலின் எதிர்ப்பு!!

528

10, 11 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தற்போது பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்த நிலையை மாற்றி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

‘மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் முயற்சியை கைவிட வேண்டும். பொதுத்தேர்வு விவகாரத்தில், கல்வியாளர்கள் பெற்றோர்கள், மாணவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு உள்ள நிலையில் தற்போது 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்தால் மாணவர்கள் மணதளவில் துன்பப்படுவர்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of