அமெரிக்காவில் புயல் நெருங்கி வருவதால் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் அவசர நிலை

688

அமெரிக்காவில் புயல் நெருங்கி வருவதையடுத்து விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் கடலில் ஏற்பட்ட புயல் சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது.

அதையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் புயலை முன்னிட்டு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்னும் சில தினங்களில் எந்த நேரத்திலும் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அம்மாகாண கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement