இந்தியாவின் இளவரசி தென்கொரியாவின் ராணியாக மாறிய கதை தெரியுமா?

1049

ஹர் ஹூவாங்-ஓக் என்ற ராணியை பற்றியான தரவுகள் 1206 – 1289ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் மூன்று பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான ‘சாம்குக் யுசா’ -வில் வரலாற்றுக் கதையாக இடம்பெற்றுள்ளது.

கி. பி. 48ஆம் காலகட்டத்தில், இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான இளவரசியாக சூரிரத்னா இருந்து வந்தார். சூரிரத்னா பேரழகியாக இருந்தார். ஒரு நாள் இவர் கனவில் ஓர் கொரிய இளவரசன் தோன்றினான். அதே நேரம் கொரிய நாட்டில் இருந்த கொரிய இளவரசனுக்கும் இந்த கனவு வந்துள்ளது. சூரிரத்னா தன் கனவில் வந்த இளவரசன் மீது காதல் மலர்ந்தது. பின் அவரின் காதலுக்கு பெற்றோரிடம் சம்மதம் பெற்றாள். பின் இளவரசரை காண கப்பல் மூலமாக கடல் வழியே பயணம் செய்து கொரியாவை சென்றடைகிறார்

அங்கு அவரது கனவில் வந்த இளவரசன் உள்ளது என்பதை அறிகிறார். அதே நேரம் தன்னைத் தேடி வந்துள்ள இளவரிசியை கொரிய இளவரசன் நேரில் கண்டு அறிகிறார்.  பின் அவரையே திருமணம் செய்து கொள்கிறார்.

சூரி ரத்னாவை கரம் பற்றியவர், கொரியாவின் காராக் பேரரசை ஆள்கின்ற சுரோ மன்னன் ஆவார். பின் சூரி ரத்னா அங்கு அரசி ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் 12 வாரிசுகள். இருவரும் அந்த நாட்டில் நல்லாட்சியை செய்து வந்தனர். அந்நாட்டு மக்கள் அரசியைத் தெய்வமாக வழிபட்டனர். பின் காலம் கடந்து ராணி இறந்தார் இவருக்கு தென்கொரியாவின் ஜிம்குகுவான் காயா என்னும் ஊரில் அரசிக்கு சமாதி மற்றும் சிலைகள் இருக்கின்றன.

சூரி ரத்னா ராணிக்கும் இந்தியாவிற்கும் இன்று என்ன சம்மந்தம் ?

சூரிரத்னா ராணி இந்தியாவிலிருந்து கிளம்பிய இடம் இன்றைய அயோத்யா. அரசியை நினைவு கோரும் வகையில் மத்திய அரசும் தென்கொரியத் தூதரகமும் இணைந்து அயோத்தியில் ராணிக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்தன.

மணிமண்டபத்தை தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக்  திறந்து வைத்தார்.  உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி நகரில் அந்த இளவரசியின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நினைவு சுவடுகளினால் நிச்சயம் இந்தியாவிற்கும் தென் கொரியா நாட்டிற்கும் வலுவான உறவு நீடித்து இருக்கும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of