எறும்பின் சுவாரஷ்யமான தகவல்

1836

 

நாம் சுறுசுறுப்பை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அதை எறும்பிடம் கற்றுக்கொள்ளலாம். சுறுசுறுப்புக்கும், உழைப்புக்கும் பலர் உதாரணமாக எறும்புகளை தான் சொல்வார்கள். எறும்புகள் பொதுவாக வெப்பமான சூழல் உள்ள பகுதிகளில்தான் அதிகமாக வாழும். எறும்புகள் சராசரியாக 2 முதல் 7 மில்லிமீட்டர் வரை வளரும்.ants

உலகத்தில் சுமார் 10 ஆயிரம் வகையான எறும்பினங்கள் உள்ளது. எறும்புகள் பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழும். எறும்பின் கால்கள் மிகவும் பலம் வாய்ந்தது மட்டுமில்லாமல், மிக வேகமாக ஓடும் திறன் கொண்டது.

இவை பொதுவாக சிவப்பு, பழுப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களில் காணப்படுகிறது. எறும்பு தனது எடையை போன்று 20 மடங்குக்கு அதிகமான சுமையை தூக்கிச் செல்லும் திறனுடையது.ANT4

எறும்புகளால் கடினமான உணவுகளை உண்ணமுடியாது.  அதனால், அதில் உள்ள திரவத்தை (Juice) மட்டும் உறிஞ்சு உண்ணக்கூடியது.ANT2

ஆனால், தச்சு எறும்புகள் (carpenter) சுமார் 1 inch வரை வளரும். எறும்புகள், தலையில் உள்ள நீட்சியின் மூலம் தொடு உணர்வு மற்றும் வாசனையை உணர்ந்து கொள்ளும் தன்மை உடையது.ANT 5

எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் காணப்படும், ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளையும், மற்றொரு வயிற்றில் மற்ற எறும்புகளுக்காகவும் உணவை எடுத்துச் செல்லும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of