பிகில்-ன் ”சிங்க பெண்ணே” என்ற பாடல் வெளியானது

833

 

பிகில் படத்தின் ‘சிங்க பெண்ணே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் ‘பிகில்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தெறி, மெர்சல் ஆகிய படங்களுக்கு பிறகு அட்லீ தற்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்திற்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. இதில் விஜய் அப்பா-மகன் என்று இருவேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து, விவேக், கதிர், நயன்தாரா, இந்துஜா  உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் இடம்பெற்றிருக்கும் ”சிங்க பெண்ணே” என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருபுறம் பெண்கள் கால் பந்தாட்டத்தை அடிப்படையாக கொண்டு பிகில் படம் உருவாவதும், அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாலும், அனைவரும் இது ‘பிகில்’ திரைப்பட பாடல் எனக்கூறி பகிர்ந்து வருகிறார்கள். மறுபுறம் விஜய் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of