இனி தமிழில் தான் ஊர், சாலை மற்றும் தெருக்களின் பெயர்கள் – அமைச்சர்

264

தமிழகத்தில் ஊர், தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணையும் விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் பாரதி திருவிழாவில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நாக்பூரில் பிறந்து தமிழகத்தை தனது தாயகம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சொல்வது தமிழகத்திற்கும், தமிழுக்கும் பெருமை என புகழாராம் சூட்டியுள்ளார்.

தொடர்ந்து, “சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் உள்ள ஊர்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் என்றும் இதற்கு அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்படும் எனவும் மேலும், 2 வாரத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்படும்” என்று கூறினார்.