வருமானம் ஈட்டுவதற்கு நிஜ ட்ரான்ஸ்பார்மராக மாறிய தெரு கலைஞர்!

465

கொலம்பியாவில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக,  Luis Rene Cruz  என்ற தெருகலைஞர் தனது குடும்பத்தை நடத்திட பெரும் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஹாலிவுட்டில்  வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ட்ரான்ஸ்பார்மர் திரைப்படத்தில், கார்கள் மனிதர்களாக மாறும்
காட்சி, Luis Rene Cruz-ன் கவனத்தை பெற்றுள்ளது.

ட்ரான்ஸ்பார்மர் படத்தில் தோன்றும் ராட்சத இயந்திர மனிதர்களை போன்று, லூயிஸ் தனது சைக்கிளையே, சிறிய ரக கார் போன்று மாற்றியமைத்துள்ளார்.

இதனை கொண்டு சாலைகளில் பயணிக்கும் இவர் நிஜ டிரான்ஸ்பார்மரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை  ஏற்படுத்துகிறது.

ரோபாவை  போன்று , சாலைகளில் நடமாடுவதை  கண்டு மக்கள் வியப்படைந்த மக்கள்  இவரது வித்தியாசமான அணுகுமுறையை கண்டு  சொற்ப பணத்தையும்  வெகுமதியாக அளித்து செல்கின்றனர்.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 13 டாலர் வருவாய் கிடைப்பதாகவும், வார இறுதியில் இரட்டிப்பு வருமானம்  கிடைப்பதாகவும் Luis Rene Cruz  மகிழ்ச்சி தெரிவித்தார்.

மாதத்திற்கு 1200 இடங்களுக்கு சென்று வருவாய்  ஈட்டி, குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழவேண்டும் என்பதே இவரின் கனவாக உள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of