பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் 10-ம் தேதி போராட்டம்

362

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை.

ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 75 ரூபாயையும் தாண்டி உள்ளது.

விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என வாகன ஓட்டிகள் அஞ்சுகின்றனர். தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்படுவதை கண்டிக்கும் வகையில், பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.