பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம்

721

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறகிறது.சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை போல பெட்ரோல்-டீசல் விலையும் அன்றாடம் நிர்ணயிக்கப்படுவதால் தினமும் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முழு அடைப்பையொட்டி இன்று அரசு பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும். பாதுகாப்பை முன்னிட்டு பெங்களூருவில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Advertisement