சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் குறிஞ்சி மலர்கள்

502
Strobilanthes kunthianus

ஊட்டி: மலைச்சரிவுகளில் பூத்துகுழுங்கும் குறிஞ்சி மலர்களை காண செல்லும் சுற்றுலா பயணிகள் அதனை கொத்து கொத்தாக பறித்து செல்கின்றனர். 3 ஆண்டுகள் முதல் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் பூப்பது வழக்கம்.

எனினும், இவற்றில் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீல நிற குறிஞ்சி மலர் வரலாற்று சிறப்பு மிக்க மலர் என்பதால், இந்த மலர்கள் பூத்தால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் கண்டு ரசிப்பது வழக்கம். இந்த ரம்மியமான காட்சிகளை புகைப்படம் எடுக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இங்கு செல்லும் பொதுமக்கள் இந்த மலர்களை கண்டு ரசிப்பது மட்டுமின்றி, அவற்றை கொத்து, கொத்தாக பறித்தும் செல்வதால்; தற்போது மலர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, யாரும் குறிஞ்சி மலர்களை பறிக்காமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here