மருத்துவர்களை வெளியேற்றும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை

757

மருத்துவ பணியாளர்களை வாடகை வீடுகளில் இருந்து வெளியேற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களால், கொரோனா பரவலாம் என்ற அச்சம் ஒரு சிலர் மத்தியில் நிலவி வருகிறது.

இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட குடியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு அதன் உரிமையாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சரிடம் மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைதொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை வாடகை வீடுகளில் இருந்து வெளியேற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உள்துறை அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்