டிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்

250

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மற்றும் வழுதாவூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவ்வழியாக இயக்கப்படும் பேருந்துகளில் இளைஞர்கள் சிலர் பயணச்சீட்டு கேட்டால் நடத்துனரை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து இளைஞர்கள் சிலர், இன்று ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், 10க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டனர். இதனால், அந்தபகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of