நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை.. துணை முதல்வர் இரங்கல்

311

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீதமுடிவுகள் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில், மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா  தற்கொலை செய்துகொண்டு  உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தாக தெரிவித்துள்ளார்.

மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீதமுடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது என்று  தெரிவித்துள்ள துணை முதலமைச்சர்,  மாணவச்செல்வங்கள் மனம்தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement