நான் அதுதான் படிப்பேன்.., கடுப்பில் பெற்றோர் மீது புகார் கொடுத்த மாணவி!

740

 

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் துணை மேலாளராக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு தனுஸ்ரீ, யாமினிஸ்ரீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

தனுஸ்ரீ திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வுஎழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். விஜய பாஸ்கர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தனுஸ்ரீ இதழியல் அல்லது பி.ஏ. (Defence) படிக்க முடிவு செய்தார். ஆனால் இதற்கு அவரது தந்தை விஜயபாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து தனக்கு விருப்பமான மேல்படிப்பை படிக்குமாறு கூறி வந்தார்.

இதனால் தந்தை-மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சான்றிதழ் வாங்க சரஸ்வதி சென்றபோது ஏற்கனவே அவரது சான்றிதழ்களை தந்தை விஜயபாஸ்கர் வாங்கி சென்றிருப்பது தெரிந்தது.

மேலும் வீட்டில் இருந்த 10-ம் வகுப்பு சான்றிதழும் மாயமாகி இருந்தன. இதுபற்றி தனுஸ்ரீ தனது தந்தையிடம் கேட்டார். அப்போது விஜய பாஸ்கர் தனக்கு விருப்பமான பி.எஸ்.சி இயற்பியல் அல்லது வேதியியல் படிக்குமாறு அறிவுறுத்தினார். இல்லையேல் மேல் படிப்பு படிக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த தனுஸ்ரீ இதுபற்றி வாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் செய்தார். அதில் மேல்படிப்பு படிக்க தனது பள்ளி சான்றிதழை தந்தை தர மறுப்பதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க செவ்வாப்பேட்டை போலீசுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

போலீசார் விஜயபாஸ் கரையும் மாணவி தனுஸ்ரீயையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் விருப்பத்துக்கு ஏற்ப படிக்க வைக்குமாறு விஜய பாஸ்கரிடம் அறிவுரை கூறினர்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of