ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி… கொலையில் முடிந்த விபரீதம்!

624

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் முரளீதரன். இவர் கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள, ஒரு தனியார் காலேஜில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.இவர் அதே காலேஜில் 2-ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பாலாஜி என்ற மாணவனும் அதே பெண்ணை காதலித்துள்ளார்.

 

காதல் விவகாரம் இந்த விஷயம் ஒருத்தருக்கொருத்தர் தெரியவர அது தகராறாக வெடித்துள்ளது. ஆனால் முரளீதரனுக்கு அந்த பெண் கிடைக்கவே கூடாது என்றும் அதற்காக அவரை கொலையே செய்துவிட வேண்டும் என்றும் பாலாஜி முடிவு செய்தார்.

இந்நிலையில், கெம்பட்டி காலணியில் உள்ள மைதானம் அருகில் முரளீதரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலாஜி, திடீரென ஒரு கத்தியை எடுத்து முரளீதரன் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

இதில் முரளீதரன் ஏராளமான ரத்தம் வெளியேறிய நிலையில் அலறி துடித்தவாறே கீழே சரிந்து விழுந்தார். இதை பார்த்ததும் பாலாஜி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் முரளீதரனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

தகவலறிந்த போலீசார் முரளீதரனின் உடலை மீட்டு இதுசம்பந்தமான நடவடிக்கையில் இறங்கினர். தப்பியோடிய பாலாஜியை 2 மணி நேரத்தில் கைது செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.