கனடாவில் தமிழகத்தை சேர்ந்த மாணவி தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது-வெளியுறவுத்துறை அமைச்சர்

116

கடனா நாட்டின் டொராண்டோ நகரில் york பல்கலைக்கழகத்தில் தமிழகத்தை சேர்ந்த ரேச்சல் ஆல்பெர்ட் முதுகலை பட்டம் படித்து வருகிறார்.

இவர் நேற்று இரவு பல்கலைக்கழகம் அருகே  சென்றுக் கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் இவரை கத்தியதால் குத்தினார். கடுமையாக தாக்கி, சிறிது தூரதம் அவரை இழுத்து சென்றார்.

இதில் படுகாயமடைந்த ரேச்சல் தற்போது மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவில் தமிழகத்தை சேர்ந்த மாணவி தாக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மாணவியின் குடும்பத்தினருக்கு உடனடியாக விசா பெற்று தர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of