தேர்தல் முடிவுக்கு பின் மாணவர்களுக்கென தனிச்சேனல் – அமைச்சர் செங்கோட்டையன்

408

தேர்தல் முடிவுக்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தனிச்சேனல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரச்சாரம், சுற்றுப்பயணம் என படு பிசியாக உள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியளார்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது, இந்தாண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கப்படும். தேர்தல் முடிவுக்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தனிச்சேனல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

தனிச்சேனல் மூலம் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் போன்ற நவீன கல்விமுறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of