பேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..! மாணவர்களின் செயலால் பரபரப்பு..!

166

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கு குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இது குறித்து பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக மாணவ, மாணவிகள் பேருந்திற்காக காத்திருந்தபோது அவ்வழியே அரசுப்பேருந்து ஒன்று நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள், சாலையில் கிடந்த கட்டையை தூக்கி பேருந்தின் மீது வீசி தாக்குதல் நடத்தியதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. தாக்குதல் நடத்தியதோடு மட்டுமின்றி அவர்கள், சாலைமறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of