தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பொங்கல் பண்டிகையை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.   

364

கரூர் அரசு கல்லூரியில் கரூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்று மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இதைதொடர்ந்து மாணவ-மாணவிகள் பாரம்பரிய பறை இசைக்கு ஏற்றவாறு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.