தனியார் மருத்துவக் கல்லூரிக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக மாணவர்களை சேர்க்க எதிர்ப்பு

556

புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக மாணவர்களை சேர்த்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது. அதன்படி இந்த 50 இடங்களில் புதுச்சேரி அரசு ஒதுக்கீடாக17 இடங்களை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டும், மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அனைத்து இடங்களையும் நிரப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரிக் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அரசு ஒதுக்கீட்டு இடங்களை வழங்க வலியுறுத்தி NR காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மற்றும் INTUC தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாணவர்களின் உரிமையை அரசும், துணைநிலை ஆளுநரும் பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of