இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தான் அரசியலை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் – மு.க.ஸ்டாலின்

465

அரசியல்வாதிகளை விட இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தான் அரசியலை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், அண்ணா, கலைஞர் பிறந்தநாள் விழா மூலம் போட்டிகள் நடத்தப்பட்டு இதுவரை 7 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசியல் குறித்து இந்த விழாவில் பேசக்கூடாது என்றாலும், பேச வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவித்தார். அரசியல்வாதிகளை விட இளைஞர்களும், மாணவர்களுக்கும் அரசியலை அதிகமாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வந்து சேர்ந்திருப்பதாக தெரிவித்த ஸ்டாலின், மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கின்ற ஆட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of