சர்ப்ரைஸ் கொடுக்கும் சப்-ரிஜிஸ்டர்கள்.. பத்திரப்பதிவு துறையில் என்ன நடக்கிறது ?

1524

“வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்பார்கள்.. அந்தளவு இரண்டு காரியங்களும் கடினமானது.

இதில் வீடு கட்ட வேண்டுமென்ற கனவு இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். நல்ல நாள், நேரம் பார்த்து வீடு, நிலம்,தங்கம் வாங்குவது வாடிக்கையான ஒன்று.

அந்த வகையில் குழந்தைகளுக்காக, எதிர்காலத்திற்கு உதவும் என சேமிப்பை எல்லாம் கொட்டி நிலம் வாங்கி  பத்திரப்பதிவை முடித்தால் ஏதோ சாதித்துவிட்ட ஒரு உணர்வு மேலோங்கும்.. தமிழகத்தை பொறுத்தவரை அரசுக்கு வருமானம் ஈட்டித்தரக்கூடிய மிக முக்கிய துறை  பத்திரப்பதிவுத்துறை..575 க்கும் அதிகமான

சப்- ரிஜிஸ்டர் அலுவலகங்கள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் நிலம்,வீடு வாங்குவது விற்பது என பல்லாயிரக்கணக்கான 

பரிவர்த்தனைகள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடைபெற்றுவருகிறது. பதிவு முடிந்த பிறகு,, நிலமோ.. வீடோ.. வாங்கியவர்களுக்கு அவர்களுடைய பத்திரத்தை சப் ரிஜிஸ்டர் அலுவகத்தில் பணியாற்றும் அலுவலர்களோ அல்லது அலுவல உதவியாளரோ தான் கொடுப்பது வழக்கம்.. அந்த நடைமுறையை,தற்போது பத்திரப் பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருக்கும்சங்கர்.ஐ.ஏ.எஸ் மாற்றியிருக்கிறார்.

நகைக்கடைகளில்,,தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எப்படி அந்த கடையின்  உரிமையாளர் அவருடைய கைகளால்,, தங்கத்தை வழங்குகிறாரோ அப்படி ஒவ்வொரு பதிவாளரும் பத்திரங்களை நேரடியாக வழங்க வேண்டுமென்று 
அறிவுறுத்தியுள்ளார்.

அதை புகைப்படமாக எடுத்து,வாட்ஸுப் குழுவில் தெரியப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறார்.

அதன் காரணமாக,,பத்திரப்பதிவு முடித்த பிறகு,,ஓரிரு மணிநேரங்களில் சொத்து 

பத்திரங்களை,பதிவாளர்கள் தங்களுடைய கைகளால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 
வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் சொத்துப்பதிவுக்காக செல்வோருக்கும் சந்தோஷத்தை கொடுக்கிறது.. மனுஷன் எதிர்பார்க்கறது எல்லாம் கொஞ்சம் சிரிப்பு..சிறிய கைகுலுக்கல்

ஒரு வாழ்த்து..அவ்வளவு தான் வேறென்ன சார்.. அதை  அன்றாடப்பணிகளில் செய்ய 
தொடங்கியிருக்கும் பதிவுத்துறைக்கு  வாழ்த்துக்கள் .

Advertisement