சுபஸ்ரீ விவகாரம்..! முன் வைத்த காலை சைடுல வைத்த ஜெயகோபால்..! என்ன தான் ஆச்சு..?

544

பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில், அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் என்றும் இருவரும் ஜாமீனில் வெளி வந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் சுபஸ்ரீ தந்தை ரவி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருவருக்கும் ஜாமீன் வழங்க கூடாது எனவும் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவல்துறைக்கு ஒத்துழைக்காதது ஏன் என்றும் தலைமறைவானது ஏன் எனவும் ஜெயகோபாலுக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜெயகோபால், தான் தலைமறைவாகவில்லை எனவும், கேரளாவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் வாபஸ் பெற்றனர். இதனால், மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of