அப்போலோவில் சி.சி.டி.வி. மேகராக்களை இயக்க வேண்டாம் எனக் கூறிய அதிகாரி உயிருடன் இல்லை

840

அப்போலோவில் சி.சி.டி.வி. மேகராக்களை இயக்க வேண்டாம் எனக் கூறிய அதிகாரி உயிருடன் இல்லை – சுப்பையா விஸ்வநாதன்

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சி.சி.டி.வி. கேமராக்களை இயக்க வேண்டாம் எனக் கூறிய அதிகாரி தற்போது உயிருடன் இல்லை என்று அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 11ஆம் தேதி அப்போலோ மருத்துவமனை சார்பில் விசாரணை ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் அப்போலோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராவில், 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை மட்டுமே காட்சிகளை சேமித்து வைக்கும் திறன் கொண்டது என்றும், அதற்கு மேல் பழைய காட்சிகள் தானாக அழிந்து, புதிய காட்சிகள் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை ஆணையத்தின் முன் நேற்று இரண்டாவது முறையாக ஆஜரானார்.

அப்போது சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது இல்லை எனவும், சி.சி.டி.வி.-ஐ இயக்க வேண்டாம் என்று கூறிய பாதுகாப்பு அதிகாரி இளங்கோவனும் தற்போது உயிருடன் இல்லை எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், இளங்கோவனுக்கு சிசிடிவி-ஐ இயக்க வேண்டாம் என்று உத்தரவிட்ட அரசு அதிகாரி குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார் .

இதையடுத்து, அவர் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டது.

Advertisement