சுபஸ்ரீ விவகாரம் – மேலும் 4 பேர் கைது

447

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனரால் இளம் பெண்ணின் உயிர் பிரிந்தது. இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனங்களையும், கோபத்தையும் வெளிப்படுத்தியது.

இதையடுத்து பள்ளிக்கரணையில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இதனிடையே ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், நடவடிக்கை எடுக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் போலீசார் கொஞ்சம் தீவிரம் காட்டினர். இதனை அறிந்த ஜெயக்கோபால் தலைமறைவானார். அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டதுடன், அவரது வீட்டில் அழைப்பாணை ஒட்டப்பட்டது.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் உள்ள ரிசார்டில் தங்கியிருந்த போது, செல்போன் சிக்னலை வைத்து ஜெயகோபாலை சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜெயக்கோபாலை பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே பேனர் வைத்த, கொடி கட்டிய பழநி, சுப்பிரமணி, சங்கர் லட்சுமிகாந்த் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of