மருமகளை வரவேற்க, இன்னொரு வீட்டின் மகளை கொன்னுட்டீங்க – நீதிபதி ஆதங்கம்

503

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அரசியல் பிரமுகர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜெயகோபால் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீது விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற ஜாமின் மனு விசாரணையில், தனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்துதெரிவித்து கட்சியினர் பேனர் வைத்தனர் என்றும் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று ஜெயகோபால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி கார்த்திகேயன், உங்கள் வீட்டு மருமகளை வரவேற்பதற்காக, இன்னொரு வீட்டு மகளை கொன்று விட்டீர்கள் என்று கூறினார். தவறு எதுவும் செய்யவில்லை, உள்நோக்கமில்லை என்றால், ஏன் தலைமறைவாக இருந்தீர்கள் என்றும் ஜெயகோபாலுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஜெயகோபாலின் ஜாமின் மனுமீது நாளை மறுதினத்திற்குள் பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 17 ஆம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of