23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவைக்கு செல்லும் வைகோ – வாழ்த்து சொன்ன சு.சாமி..!

412

மாநிலங்களவை உறுப்பினராக 23 ஆண்டுகளுக்குப்பின் தேர்வு செய்யப்பட்ட வைகோ நாடாளுமன்றம் சென்றார். அங்கு சுப்ரமணியன் சுவாமி அவரை நலம் விசாரித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்தவாரம் நடைபெற்றது. திமுக சார்பில் 3 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் மூன்றுபேரும் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டார்.


மாநிலங்கவையில் 1978-ம் ஆண்டு அடியெடுத்து வைத்தவர் வைகோ. அவரது ஆற்றல்மிக்க, வலுவான வாதம் மாற்றுக்கட்சியினரையும் கவர்ந்த ஒன்று. இந்திரா காந்தியால் ‘மை சன்’ என அன்போடு அழைக்கப்பட்டவர். பின்னர் 1984-ம் ஆண்டும், பின்னர் 1990-ம் ஆண்டும் மூன்றுமுறை தொடர்ச்சியாக மாநிலங்களவையில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.

1998-ம் ஆண்டு சிவகாசி மக்களவை தொகுதியில் உறுப்பினரானார், பின்னர் மீண்டும் 1999-ல் அதே தொகுதியில் மக்களவை உறுப்பினரானார். டெல்லி அரசியலில் குறிப்பிடத்தக்க நாடாளுமன்ற பேச்சாளர்களில் வைகோவும் ஒருவர். பாஜக, இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்களுடனும் ஆழமான நட்பு பாராட்டி வருபவர்.

வடமாநில தலைவர்கள் பலருக்கு இனிய நண்பர், 1993-ல் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் மதிமுக தொடங்கிய பின்னர் அவர் போட்டியிட்ட தேர்தலில் 98, 99 தேர்தலில் மட்டுமே வென்றார்.

சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட்டதில்லை. போட்டியிட்டு ஒருமுறையும் வாபஸ் பெற்றார்.
தனது கட்சி பாஜக அரசில் அங்கம் வகித்தபோதும் மத்திய அமைச்சர் பதவியை தான் வகிக்க விரும்பாமல் கட்சியில் உள்ளவர்களுக்கு வழங்கினார்.