நமக்குத் தான் ரெண்டுமே இல்லையே..! பாஜகவினர் வயிற்றில் புளியை கரைத்த சு.சுவாமி..!

1881

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணிய சுவாமி. இவர் எந்த டுவீட் போட்டாலும், ஐயயே சைத்தான் சைக்கிள்ள வருது என்ற வசனம் போல், பாஜகவினர் பதட்டத்திலே இருப்பார்கள்.

அதுபோல இன்றும் அவர் ஒரு டுவீட் போட்டுள்ளார். அந்த டுவீட்டில்,

“புதிய பொருளாதார கொள்கை எதுவுமே வராத நிலையில், 5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்க தயாராக இருங்கள். ஒன்று துணிவு இருக்க வேண்டும், அல்லது புத்திசாலித்தனம் இருக்க வேண்டும்.

இதில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க முடியும். ஆனால் நம்மிடம் இரண்டுமே இல்லை”

என்று கூறி நிர்மலா சீதாராமனை மறைமுக தாக்கியுள்ளார்.

இவர் எந்த கருத்துக்கூறினாலும் அமைதியாகவே இருக்கும் பாஜக, இந்த கருத்துக்கும் தற்போது அமைதியாக தான் உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of