“இது ஒரு தேசவிரோதம்..” மத்திய அரசின் செயலுக்கு பொங்கியெழுந்த பாஜக மூத்த தலைவர்..!

722

கடந்த சில வருடங்களாகவே ஏர் இந்தியா நிறுவனம் அதிகப்படியான கடனில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால், இந்த நிறுவனத்தின் முக்கால்வாசி பங்குகளை விற்பனை செய்வதற்கு கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது.

ஆனால், இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இந்நிலையில் தற்போது 100 சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தேச விரோத செயல் எனவும், நீதிமன்றத்திற்கு எதிராக தான் செல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.