“TAX மேல TAX போட்டு” – அருண் ஜெட்லியையும் விட்டுவைக்காத சுப்பிரமணியன் சாமி

671

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி விமர்சித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏராளமான ஊழல் செய்துள்ள ப.சிதம்பரம் மீது 7 வழக்குகள் உள்ளன என்றும் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

ப.சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட உள்ளதாக சுப்ரமணிய சாமி குறிப்பிட்டார்.மன்மோகன் சிங் கைக்கூலியாக இருந்ததாகவும், நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு காங்கிரஸ் அரசு தான் காரணம் என்று தெரிவித்தார்.

மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் அரசின் செயல்பாடுகள் இருக்கவேண்டும். TAX க்கு மேல் TAX போட்டு கிராம மக்களுக்கு தெரியாத GST வரி விதிப்பு போன்றவையால் மக்கள்  பாதிப்படைந்துள்ளனர்.

அருண் ஜெட்லி,பியூஸ் கோயல்,நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது என்றும், அவரால் தற்போதைய பொருளாதார தேக்கநிலையை சரிசெய்ய முடியாது என்றும் பேசிய அவர், அதனால் தான் அவர்கள் தவறாக பேசிவருவதாக சுப்ரமணிய சாமி தெரிவித்தார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of