ஆட்சி கலைப்பு – ஓராண்டுக்கு அவசரநிலை சட்டம் அமல்

576

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையிலான மோதல்களில் உயிர்ப்பலி ஏற்படுகிறது. அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், நிலவரம் கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் நிலையில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த கவர்னர்கள் மற்றும் ஆளும்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு அதிபர் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் எவ்வித  முடிவும் எடுக்கப்படவில்லை.

இதானல் நாட்டில் சரிவடைந்து வரும் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அதிபர் அந்நாட்டின் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளையும் கலைத்து உத்தரவிட்டார்.

மறு அறிவிப்பு வரும்வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஓராண்டு காலத்துக்கு அவசரநிலை சட்டம் பிரகடனப்படுத்தவதாகவும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of