துடைப்பத்துடன் மோடியின் சிற்பம்..! பட்நாயக் போட்ட டுவீட்..!

148

பாஜகவின் முக்கிய தூணே பிரதமர் மோடி தான். இந்த கட்சியை முன்னேற்ற வைத்ததில் முக்கிய பங்கு மோடிக்கும் உண்டு. பல்வேறு பயணங்களுக்கு பிறகு நாட்டின் பிதமராக மோடி 2-வது முறை பதவியேற்றுள்ளார்.

இன்று தனது 69-வது பிறந்தநாளை மோடி கொண்டாடி வருகின்றார்.

அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலோரங்களில் மணல் சிற்பங்கள் செய்வதில் சிறந்து விளங்கக்கூடிய சுதர்சன் பட்நாயக் டுவிட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மோடி துடைப்பத்துடன் சுத்தம் செய்வதைப் போல் மணல் சிற்பம் செய்யப்பட்டுள்ளது. ஸ்வச் பாரத் திட்டத்தை நினைவுக்கூறும் வகையில் இந்த சிற்பம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of