திருமுருகன்காந்திக்கு திடீர் மயக்கம் – வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி

709

வேலூர் சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன்காந்திக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு, நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று வயிற்று போக்கு, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டதால், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில் திருமுருகன் காந்திக்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement