ஏசி வழியாக தீடீர் புகை…! துடிதுடித்த 2 குழந்தைகள்… மருத்துவமனையில் நடந்த கொடூரம்..!

421

கதார் தலைநகரம் தோஹாவில் உள்ள அபார்ட்மெண்டில் கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த ஹரிஸ் மற்றும் ஷமீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.தோஹாவில் நர்ஸ் வேலை செய்து வரும் இவர்களது அபார்ட்மெண்ட் வீட்டில் ஏசி இயந்திரம் வழியாக ரசாயனக் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் அந்த வீட்டில் இருந்த 2 குழந்தைகள் மயக்கமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பூச்சிக் கொல்லி மருந்து வீட்டில் தெளிக்கப்பட்டது கூட அவர்களது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.