இப்படி ஆயிடுச்சே.. சாலையில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. ..

527

ராயபுரம் பகுதிக்கு உட்பட்ட ஜி.எம் பேட்டை சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் விரிசல் ஏற்பட்டு, சுமார்  80 மீட்டர் நீளத்திற்கு மூன்றடி வரை  உள்வாங்கியுள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தன. இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை சரி செய்ய முயன்ற போது சாலையில் மேலும் பள்ளம் உள்வாங்கியதால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சேதமடைந்த சாலைப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் விரிசல் விழுந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of