முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த தேமுதிக துணை செயலாளர்

177

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக, திமுக ஆகியவை தலா 3 இடங்களில் வெற்றி பெற முடியும்.

அதிமுகவிடம் 3ல் ஒரு இடத்தை எப்படியாவது கேட்டு வாங்க வேண்டும் தேமுகதிக பிடிவாதமாக உள்ளது.

இந்நிலையில் பிரேமலதாவின் தம்பியும் தேமுதிகவின் துணை செயலருமான சுதீஷ் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது மாநிலங்களவை எம்.பி. சீட் தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of