2018-ல் மட்டும் இவ்வளோ தற்கொலைகளா..? – அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம்

193

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குற்ற ஆவண புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக பரவலாக கூறப்படும் நிலையில்; தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் அதற்கு மாறான தகவல் வெளியாகியுள்ளது.

அதில் விவசாயிகளைவிட, சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வேலை இல்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளதாகவும்; ஒட்டுமொத்தமாக 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 516 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2017-ம் ஆண்டைவிட 3.6% அதிகம் என கூறப்பட்டுள்ளது.

Jobless

2018-ம் ஆண்டு சராசரியாக தினமும் வேலை இல்லாதவர்கள் 35 பேரும்; மொத்தமாக ஒரு ஆண்டில் 12 ஆயிரத்து 936 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சுயதொழில் செய்வோர் சராசரியாக தினமும் 36 பேரும்; மொத்தமாக ஒரு ஆண்டில் 13 ஆயிரத்து 149 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Self-employmentFarmer

விவசாய துறையில் 10 ஆயிரத்து 349 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், அதில் 5 ஆயிரத்து 763 பேர் விவசாயிகள் என்றும், 4 ஆயிரத்து 586 பேர் விவசாய தொழிலாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of