திருச்சியில் மகளிர் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை!

568

கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, திருச்சி காந்தி சந்தை பகுதியில் உள்ள மகளிர் சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார்.

இன்னும் திருமணமாகாத நிலையில், நேற்று மாலை, கேகே நகர் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில், செந்தமிழ்ச்செல்வி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செந்தமிழ்ச்செல்வியின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, திருச்சி சிறப்பு காவல்படை காவலர் முத்து, அதன்பிறகு, சென்னை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று அதிகாலை மணிகண்டன் என அடுத்தடுத்து காவலர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் காவலர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of